வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 30 செப்டம்பர் 2016 (16:44 IST)

உள்ளாட்சி தேர்தலுக்கு தடையா? - உச்சநீதிமன்றம் தீர்ப்பு

தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்க திமுக தரப்பு தாக்கல் செய்திருந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
 

 
நடைபெறவுள்ள தமிழக உள்ளாட்சி தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்தவும், தேர்தல் பணிகளை மத்திய அரசு ஊழியர்களை கொண்டு நடத்தவும் உத்தரவிடக் கோரி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
 
இந்த மனு கடந்த 21ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இதனையடுத்து, உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
 
அதில், ’சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அடுத்த உத்தரவை பிறப்பிக்கும் வரை, உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கு தடைவிதிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது.
 
மேலும், ஒரு வாரத்தில் தமிழக அரசு, தமிழக தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம் வழக்கு விசாரணையை வரும் அக்டோபர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.