ஞாயிறு, 23 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 30 ஜூன் 2016 (12:29 IST)

நள்ளிரவில் குளிக்க வைத்து அரைநிர்வாணமாக வரச்சொல்லி ராகிங்: மாணவி தற்கொலை

குன்னூர் தனியார் கல்லூரியில் படித்து வந்த மாணவி பிரீத்தி சீனியர் மாணவிகளின் ராகிங் கொடுமையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கல்லூரியில் சேர்ந்த மூன்றே நாளில் மாணவி தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த மாணவி பிரீத்தி 12-ஆம் வகுப்பு தேர்வில் 1080 மதிப்பெண் பெற்று குன்னூரில் உள்ள தனியால் கல்லூரியில் பி.காம் சி.ஏ படித்து வந்தார்.
 
அவர் கடந்த 22-ஆம் தேதி கல்லூரியில் சேர்ந்தார். கலூரியில் சேர்ந்த முதல் நாளே சீனியர் மாணவிகள் பிரீத்தியை ராகிங் செய்ய ஆரம்பித்துள்ளனர். இது குறித்து பிரீத்தி அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார். நள்ளிரவு 2 மணிக்கு கடும் குளிரில் குளிக்க சொன்னதாகவும், அரைநிர்வாணமாக வெளியே வரசொன்னதாகவும் பெற்றோரிடம் கூறியுள்ளார்.
 
சரியாக சாப்பிட விடாமல், தூங்கவிடாமல் தொந்தரவு செய்தனர். இதுகுறித்து பிரீத்தியின் தோழிகள் போன் செய்து அவரது பெற்றோரிடம் தெரிவித்தனர். இதனால் மனமுடைந்த பிரீத்தி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
 
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரீத்த பிணமாக வெளியே வந்தார். இதில் சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரீத்தாவின் பெற்றோர்கள் கூறியுள்ளனர்.