மேலும் 5 போலீஸ் அதிகாரிகள் கைதா? பரபரப்பை ஏற்படுத்தும் சாத்தான்குளம் வழக்கு

sathankulam
மேலும் 5 போலீஸ் அதிகாரிகள் கைதா?
Last Updated: புதன், 8 ஜூலை 2020 (09:22 IST)
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மேலும் 5 போலீசாரிடம் சிபிசிஐடி விசாரணை செய்து வருவதாகவும், இந்த வழக்கில் அவர்களும் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் வெளிவந்துள்ள தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் ஏற்கனவே ஒரு இன்ஸ்பெக்டர், 2 சப் இன்ஸ்பெக்டர் மற்றும் இரண்டு காவலர்களை என மொத்தம் ஐந்து போலீசார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது
சிறப்பு உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 5 காவலர்களை மீண்டும் அழைத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 5 காவலர்களை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும், விசாரணையைத் தொடர்ந்து இவர்கள் ஐவரும் கைதாக வாய்ப்பு என தகவல் வெளிவந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இன்று விசாரணை செய்யப்பட்டு வருபவர்கள் சிறப்பு உதவி ஆய்வாளர் பால்த்துரை, காவலர்கள் செல்லத்துரை, சாமத்துரை, தாமஸ் ஆகியோர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சாத்தான்குளம் வழக்கை சிபிஐ ஏற்று நடத்த ஒப்புக் கொண்டுள்ளதாக மத்திய அரசு தமிழக அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளதால் இந்த வழக்கு சிபிஐக்கு விரைவில் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


இதில் மேலும் படிக்கவும் :