1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 24 ஜூலை 2020 (11:33 IST)

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழகத்தை மட்டுமின்றி நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் செல்போன் வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர்கள் காவல்துறையினர்களால் கொலை செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கை முதலில் சிபிசிஐடியும் தற்போது சிபிஐயும் விசாரணை செய்து வருகிறது.
 
இந்த நிலையில் இந்த வழக்கில் இதுவரை 10 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் காவலர்கள் முத்துராஜ், தாமஸ் பிரான்ஸிஸ் ஆகியோர்களின் ஜாமீன் மனு சற்றுமுன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில்  காவலர்கள் முத்துராஜ், தாமஸ் பிரான்ஸிஸ் ஆகியோர்களின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரணை செய்தபோது, ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைத்து விடுவார்கள் என சிபிஐ தரப்பு வாதம் செய்தது
 
சிபிஐ தரப்பு வழக்கறிஞரின் வாதத்தை ஏற்று நீதிபதி காவலர்கள் முத்துராஜ், தாமஸ் பிரான்ஸிஸ் ஆகியோர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்வதாக உத்தரவு பிறப்பித்தார்.