விடுதலை ஆகிறார் சசிகலா? கர்நாடக சிறைத்துறை பரிந்துரை!!

Last Modified செவ்வாய், 11 ஜூன் 2019 (08:31 IST)
சொத்துகுவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை நன்னடத்தை விதிகளின் கீழ் விடுதலை செய்ய கர்நாடக சிறைத்துறை பரிந்துரை செய்துள்ளதாம். 
 
சொத்துகுவிப்பு வழக்கில், சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய நான்கு பேருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 வருடம் சிறை தண்டனை விதித்தது கடந்த 2017 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.
 
சசிகலா சிறைக்கு சென்று இரண்டரை வருடங்கள் நெருங்கியுள்ள நிலையில், சசிகலாவை நன்னடத்தை விதிகளின் கீழ் விடுப்பது குறித்து கர்நாடக சிறைத்துறை அம்மாநில அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 
இந்த கடிதத்தை அரசு ஏற்றுக்கொண்டால் சசிகலா தண்டணை காலத்தின் ஓராண்டுக்கு முன்பே, அல்லது இந்த ஆண்டு இறுதியில் விடுதலையாக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. 
சசிகலாவின் 4 வருட தண்டனை வரும் 2021 ஆம் ஆண்டு முடிவுக்கு வரும். ஆனால், அவர் நன்னடத்தை அடிப்பபடையில் விடுதலை செய்யப்படும் நிலையில் அரசியலில் சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என தெரிகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :