1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: சனி, 10 டிசம்பர் 2016 (10:27 IST)

ஜெ.வின் உதவியாளர் பூங்குன்றனை வெளியேற்றி விட்டாரா சசிகலா?

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு உதவியாளராக இருந்து வந்த பூங்குன்றன் என்பவரை, சசிகலா வெளியேற்றி விட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


 

 
தஞ்சாவூரை சேர்ந்தவர் புலவர் சங்கரலிங்கம். இவர் சசிகலாவின் தமிழ் ஆசிரியர் ஆவர். எனவே அவரை ஜெயலலிதாவிற்கு அறிமுகம் செய்து வைத்தார் சசிகலா. அதன்பின் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரிய நபராக மாறிய சங்கரலிங்கம், ஜெயலலிதாவின் மேடை பேச்சுக்கான உரை மற்றும் அறிக்கை வரை அனைத்தையும் தயார் செய்து கொடுத்து வந்தார்.
 
அவருக்கு பின் அவரின் மகன் பூங்குன்றன் போயஸ் கார்டனில் நுழைந்தார். அவரின் தந்தை போலவே, இவரும் ஜெ.வின் நம்பிக்கை உரியவராக இருந்தார். கார்டன் செயலாளராக அவர் செயல்பட்டார். 
 
கட்சி நிர்வாகிகள் அனுப்பும் புகார் மனுக்கள், கட்சியின் உள் விவகாரங்களில் ஏற்படும் மோதல் அனைத்தையும் முதல்வர் கவனத்திற்கு இவர்தான் கொண்டு செல்வார். அவரை மீறி யாரும் ஜெ.வை சந்திக்க முடியாது என்ற நிலை இருந்தது.
 
இந்நிலையில், சசிகலாவால் கொண்டு வரப்பட்ட பூங்குன்றன், இன்று அவராலேயே வெளியே அனுப்பப்பட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 15 வருடங்களுக்கு மேல் ஜெ.வின் உதவியாளராக செயல்பட்டு வந்த அவர் போயஸ் கார்டனில் தற்போது இல்லை எனக்கூறப்படுகிறது.
 
போயஸ் கார்டனில் இருந்து பூங்குன்றனை சசிகலா ஏன் வெளியேற்றினார் என்பது மர்மமாகவே இருக்கிறது.