1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: திங்கள், 5 டிசம்பர் 2016 (10:34 IST)

சசிகலா உறவினர்கள் சென்னையில் அவசர ஆலோசனை?

சசிகலா உறவினர்கள் சென்னையில் அவசர ஆலோசனை?

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நிலையில் ஏற்பட்ட திடீர் பின்னடைவு காரணமாக தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. அவருக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் அப்பல்லோ மருத்துவர்களுடன் சேர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றன.


 
 
முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை திடீரென மூச்சுத்திணறல் அதிகமாக அதன் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் உறவினர்கள் சென்னையில் அவசர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வருகின்றன.
 
சசிகலாவின் தம்பி திவாகரன் உட்பட சசிகலாவின் குடும்பத்தினர் தற்போது சென்னை பெசண்ட் நகரில் உள்ள ஒரு வீட்டில் அடுத்தக்கட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருவதாக பிரபல தமிழ் வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டு வருகிறது.
 
இந்நிலையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அப்பல்லோவுக்கு உடனடியாக வர வேண்டும் என தலைமை கழத்தில் இருந்து உத்தரவு வந்ததாகவும் கூறப்படுகிறது.