1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 4 ஆகஸ்ட் 2016 (08:41 IST)

சசிகலா புஷ்பாவை இவர்கள் தான் இயக்குகிறார்களாம்?: பகீர் தகவல்கள்!

யாரும் எதிர்ப்பதற்கு அஞ்சும் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து அவர் மீது பகிரங்க குற்றச்சாட்டுகள் வைத்த சசிகலா புஷ்பாவின் பின்னால் யாரோ இருந்து அவரை இயக்குகிறார்கள் என பலரும் சந்தேகிக்கின்றனர்.


 
 
இது குறித்து அதிமுக வட்டாரத்தில் பேசப்படும் தகவலில் சசிகலா புஷ்பாவின் பின்னணியில் மூன்று பேர் செயல்படுவதாக கூறப்படுகிறது. பல அதிமுக முக்கிய தலைவர்களின் சிபாரிசுடன் குறைந்த காலத்திலேயே உயர்ந்த இடத்துக்கு போனவர் சசிகலா புஷ்பா. ஆனால் அவர் தற்போது எதிர் வரிசையில் உள்ள தலைவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறப்படுகிறது.
 
திருச்சி சிவாவுடன் ஏற்பட்ட மோதலைக்கூட ஒரு நாடகமாக தான் பார்க்கின்றனர் அதிமுக வட்டாரத்தில். காரணம் சசிகலா புஷ்பா ஆண் நண்பர் ஒருவருடன் பேசிய ஆடியோ வாட்ஸ் அப்பில் வெளியானது, பின்னர் திருச்சி சிவாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படமும் வெளியானது. இதனால் அதிமுகவில் நெருக்கடி உருவாக, திமுகவில் அவருக்கு அரவணைப்பு கிடைத்ததாக கூறுகின்றனர் அவர்கள்.
 
திமுக எம்.பி. கனிமொழியின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த சசிகலா புஷ்பா, கனிமொழியுடன் சேர்ந்து ஷாப்பிங் எல்லாம் சென்றதாக கூறுகின்றனர் அதிமுகவினர். மேலும் டெல்லியில் அவர் பல திமுக புள்ளிகளை சந்திப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
 
ஆக, கனிமொழி, திருச்சி சிவா மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவருடைய பின்னணியில் தான் சசிகலா புஷ்பா இப்படி செயல்படுகிறார் என அதிமுகவில் பேசுகிறார்கள்.
 
திமுக எதற்கு சசிகலா புஷ்பாவை இயக்குகிறார்கள் என்ற கேள்விக்கும் பதில் வைத்திருக்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில், மாநிலங்களவையில் ஒரு கட்சிக்கு 5 உறுப்பினர்கள் இருந்தால்தான் மரியாதை. ஒரு குழுவாக அங்கீகரிப்பார்கள். இப்போது திமுகவுக்கு 4 உறுப்பினர்களே உள்ளனர். எனவே, இன்னும் ஒரு உறுப்பினரை இணைத்தால் உரிய அங்கீகாரம் கிடைக்கும்.
 
அதிமுகவில் கட்சியே முன்வந்து சசிகலா புஷ்பாவை கட்சியில் இருந்து நீக்கியதால் இனி எந்தக் கட்சியில் இணைந்தாலும் அவரது பதவி பறிபோகாது என திமுக தரப்பு நினைப்பதாகவும் கூறுகின்றனர்.