திங்கள், 13 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 2 ஆகஸ்ட் 2016 (12:02 IST)

ஜெயலலிதாவின் பழைய கதைகளை கிளறும் சசிகலா புஷ்பா: சூடாகும் அதிமுக கூடாரம்!

தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்திய அளவில் பிரபலமான ஒரு அரசியல் தலைவர். துணிச்சலான, தைரியமான, இரும்பு பெண் என புகழப்படும் ஜெயலலிதாவின் துணிச்சலுக்கே சவால் விடும் அளவுக்கு துணிந்துவிட்டார் சசிகலா புஷ்பா.


 
 
மாநிலங்களவையின் மையத்தில் நின்று ஜெயலலிதா மீது சசிகலா வைத்த பகிரங்க குற்றச்சாட்டுகள் அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து அவர் அளித்த பேட்டிகள் அதிமுக வட்டாரத்திற்கு குடைச்சலாக இருக்கிறது.
 
எனது குடும்பத்தினர் பயத்தில் உள்ளனர். தமிழ்நாட்டில் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து வாழ முடியாது, பதவியை திருப்பி கொடுத்துவிடு என்கிறார்கள் குடும்பத்தினர் என சசிகலா புஷ்பா பேட்டியளித்துள்ளார்.
 
மேலும் அவரது பேட்டியில், ஏற்கெனவே செரீனா என்ற பெண்ணின் மீது என்ன என்ன வழக்குகள் பாய்ந்தன என்பதும் சின்ன மேடம் சசிகலாவின் கணவரே ஜெயிலில் எவ்ளோ நாள் இருந்தார். அவரின் சகோதருக்கு என்ன நடந்தது என்பது எல்லா தெரியும்.
 
அவர்களுக்கே அந்த கதி என்றால். எனக்கு, எனது கணவர், மகன் ஆகியோருக்கு என்ன வேண்டுமானாலும்  நடக்கலாம். எனக்கு உண்மை மட்டும் தெரியும். என சசிகலா புஷ்பா பழைய விஷயங்களை கிளறியது அதிமுகவினரை சூடேற்றி உள்ளது.