உன்னை கொல்வதற்காக டெல்லியில்தான் உள்ளேன்: சசிகலா புஷ்பாவிற்கு மிரட்டல்!


Caston| Last Modified வியாழன், 11 ஆகஸ்ட் 2016 (15:52 IST)
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவிற்கு தொடர்ந்து வாட்ஸ் ஆப் மூலமாகவும், கடிதங்கள் மூலமாகவும் மிரட்டல்கள் வருவதாக இன்று பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

 
 
டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சசிகலா புஷ்பா தனக்கு அதிமுகவினரிடம் இருந்து மிரட்டல் வருவதாக கூறினார். தற்போது கூட ஒரு அதிமுக பிரமுகர் பெயரிட்ட மிரட்டல் கடிதம் வந்திருப்பதாக கூறி அந்த கடிதத்தை காட்டினார்.
 
அந்த கடிதத்தில், நான் உன்னை கொல்வதற்காக டெல்லியில் தான் உள்ளேன். உன் சாவு என் கையில் தான் என எழுதியிருப்பதாக கூறினார். அந்த கடிதத்தின் மேலே அதிமுக தொண்டன் என தெளிவாக எழுதப்பட்டுள்ளது என கூறினார்.
 
தொடர்ந்து பேசிய அவர், இதுதான் அதிமுகவின் கொள்கையா?இப்படித்தான் தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு உள்ளதா? இந்த அதிமுகவுக்காகத்தான் நான் இவ்வளவு உழைத்தேனா? என குற்றம்சாட்டினார்.
 


இதில் மேலும் படிக்கவும் :