1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 2 ஆகஸ்ட் 2016 (10:53 IST)

கனிமொழி மூலம் கருணாநிதிக்கு தகவல் அனுப்பிய சசிகலா புஷ்பா!

மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா டெல்லி விமான நிலையத்தில் திமுக உறுப்பினர் திருச்சி சிவாவை தாக்கியதும், அதிமுகவில் இருந்து நீக்கியதும், ஜெயலலிதா மீதான பகிரங்க குற்றச்சாட்டுகளும் தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


 
 
இந்த விவகாரம் அரசியல் அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ்நாட்டு அரசியல் தற்போது டெல்லி வரை பேசப்பட்டு வருகிறது.
 
மாநிலங்களவையில் பேசிய சசிகலா புஷ்பா திருச்சி சிவாவை அடித்ததற்கு மன்னிப்பு கேட்டதுடன், அவர் ஒரு நேர்மையான மனிதர் என கூறினார். மேலும் திமுக தலைவர்களிடமும் மன்னிப்பு கேட்பதாக கூறினார். சசிகலா புஷ்பாவுக்கு நேற்று முதல் ஆளாக திமுக எம்.பி.கனிமொழி ஆதரவு தெரிவித்தார்.
 
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா திமுக எம்.பி.திருச்சி சிவாவுடனான மோதலை மேடம் கனிமொழி மூலம் திமுக தலைவர் கருணாநிதிக்கு தெரியப்படுத்தியதாக கூறியுள்ளார். ஏற்கனவே சசிகலா புஷ்பா அதிமுகவில் இருந்த போது கனிமொழிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது.