திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : வெள்ளி, 14 ஜூலை 2017 (13:30 IST)

சசிகலாவை டிஐஜி ரூபாவிடம் சிக்க வைத்த மொட்டை கடிதம்!

சசிகலாவை டிஐஜி ரூபாவிடம் சிக்க வைத்த மொட்டை கடிதம்!

பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு எதிராக ருத்ர தாண்டவம் ஆடுகிறார் கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபா. இவரது குற்றச்சாட்டு தமிழகம் மற்றும் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
10 நாட்களுக்கு முன்னர் கர்நாடக சிறைக்கு டிஐஜி-ஆக நியமிக்கப்பட்ட ரூபா பகிரங்கமாக அம்மாநில டிஜிபி தத்தாவுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் சசிகலாவுக்கு சிறை விதிகளை வளைத்து அளிக்கப்படும் சிறப்பு வசதிகள் மற்றும் அதற்காக அளிக்கப்பட்ட லஞ்சம் குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.
 
அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் தானே நேரில் சென்று ஆய்வு செய்து சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்படுவதை நேரில் பார்த்ததாகவும் தைரியமாக சொல்கிறார் டிஐஜி ரூபா.
 
டிஐஜி ரூபாவுக்கு சசிகலாவுக்கு அளிக்கப்படும் இந்த சிறப்பு சலுகைகள் குறித்து தெரியவர ஒரு மொட்டை கடிதம் தான் காரணம் என பேசப்படுகிறது. பெயர் சொல்ல விரும்பாத ஒரு சிறை காவலர் சசிகலா விவகாரம் குறித்து ரூபாவுக்கு மொட்டை கடிதம் ஒன்றை அனுப்பியதாக தகவல்கள் வருகின்றன.
 
அந்த கடிதத்தில், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சிறைக்கு வந்தது முதல் சிறையில் உள்ள உயரதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை பணம் கொடுத்து கவனிக்கப்படுகின்றனர் எனவும் கூறியுள்ளார்.