1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 13 டிசம்பர் 2016 (16:13 IST)

சசிகலா விஷம் வைத்து கொன்றுவிட்டார்: ஜெ.வின் சகோதரி மகள் பேட்டி!

சசிகலா விஷம் வைத்து கொன்றுவிட்டார்: ஜெ.வின் சகோதரி மகள் பேட்டி!

தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து பலரும் சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். பிரதமர் மோடிக்கு நடிகை கௌதமி இது தொடர்பாக இரண்டு முறை கடிதம் கூட எழுதியுள்ளார். இந்நிலையில் ஜெயலலிதாவின் சகோதரி மகள் அம்ருதாவும் அவரது மரணம் குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளார்.


 
 
கர்நாடகா ஊடகத்திற்கு பேட்டியளித்த ஜெயலலிதாவின் சகோதரி மகள் அம்ருதா, ஜெயலலிதா அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என கேள்விபட்டதும் அவரை பார்க்க பலமுறை முயற்சி செய்தேன். ஆனால் சசிகலா என்னை தடுத்துவிட்டார்.
 
அம்மாவுக்கு உடல் நலம் சரியில்லை இப்போது பார்க்க முடியாது என மூன்று முறை செக்யூரிட்டி வைத்து என்னை திருப்பி அனுப்பிவிட்டார். அப்படி என்ன மருத்துவமனையில் ரகசிய சிகிச்சை என்று தெரியவில்லை. அவரது மரணத்தில் மர்மம் உள்ளது. இதனை அரசு விசாரிக்க வேண்டும்.
 
ஜெயலலிதா அம்மாவின் சொத்திற்கு ஆசைப்பட்டு சசிகலா ஸ்லோ பாய்சன் கொடுத்தது உண்மையாக தான் இருக்கும். சசிகலா ஜெயலலிதா அம்மாவின் பெயரை பயன்படுத்தி பல ஆயிரம் கோடி சம்பாதித்துள்ளார் என அம்ருதா கூறியுள்ளார்.