1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : வெள்ளி, 10 பிப்ரவரி 2017 (18:28 IST)

சசிகலாவின் மனுவை பார்த்து ஷாக் ஆன ஆளுநர்!

சசிகலாவின் மனுவை பார்த்து ஷாக் ஆன ஆளுநர்!

அதிமுகவில் ஏற்பட்ட பிளவால் தமிழக அரசியலில் அசாதரணமான சூழல் நிலவி வருகிறது. சசிகலா, ஓபிஎஸ் இருவரும் நேருக்கு நேர் மோதி வருகின்றனர். இத்தனை நாட்கள் சசிகலாவுக்கு எதிராக இருந்த அதிருப்தி ஓபிஎஸ் பக்கம் ஒன்று சேர்ந்து வருகிறது.


 
 
இந்நிலையில் நேற்று சென்னை வந்து ஆளுநர் வித்யாசாகர் ராவை முதல்வர் பன்னீர்செல்வமும், அதிமுக தற்காலிக பொதுச்செயலாளர் சசிகலாவும் சந்தித்து தங்கள் மனுக்களை அளித்தனர்.
 
சசிகலா அளித்த மனுவில் தனக்கு 134 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதால் ஆட்சியமைக்க உரிமை கோரினார். ஓ.பன்னீர்செல்வம் தவிர அனைத்து எம்எல்ஏக்களின் ஆதரவும் அதாவது மொத்தம் 134 எம்எல்ஏக்களின் ஆதரவும் இருப்பதாக கூறி ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார் சசிகலா.
 
இதனை பார்த்த ஆளுநர் ஷாக் ஆகிவிட்டாராம். சசிகலா ஆளுநரை சந்திக்கும் முன்னர் முதல்வர் பன்னீர்செல்வம் ஆளுநரை சந்தித்தார். அப்போது 5 அதிமுக எம்எல்ஏக்கள் பகிரங்கமாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் கை கோர்த்து ஆளுநரை சந்தித்த நிலையில் சசிகலா தமக்கே அனைத்து எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக கூறியுள்ளாது ஆளுநரையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.