1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : புதன், 28 டிசம்பர் 2016 (12:11 IST)

சசிகலா குடும்பத்தின் கருப்பு பக்கத்தை வெளிச்சம்போட்டு காட்டும் வீடியோ: வீட்டை இழந்த கங்கை அமரன்!

சசிகலா குடும்பத்தின் கருப்பு பக்கத்தை வெளிச்சம்போட்டு காட்டும் வீடியோ: வீட்டை இழந்த கங்கை அமரன்!

அதிமுக பொதுச்செயலாளர் பதவியை பிடிக்க முயற்சிக்கும் சசிகலா மீது நாளுக்கு நாள் பல குற்றச்சாட்டுகள் வருகின்றன. இந்நிலையில் சசிகலாவை மையமாக வைத்து Who Is The Benami Queen Of The Tamilnadu என்ற பெயரில் ஆய்வுப்படம் ஒன்றை அறப்போர் இயக்கம் தற்போது வெளியிட்டு வருகிறது.


 
 
சசிகலா மற்றும் அவரது உறவினர்களின் 43 நிறுவனங்கள் பினாமியாக இருப்பதை ஆதாரப்படுத்தி உள்ளார்கள் இந்த படத்தில். இந்நிலையில் தற்போது வெளியிடப்பட்ட ஒரு வீடியோ காட்சியில் சசிகலா தரப்பு பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான கங்கை அமரனை எப்படி மிரட்டி அவரது வீட்டை அபகரித்தார்கள் என்பதை கூறியுள்ளனர்.
 
ஓஎம்ஆர் சாலையில் பையனூர் என்ற இடத்தில் 22 ஏக்கர் பரப்பளவில் கங்கை அமரனுக்கு பண்ணை வீடு ஒன்று இருந்தது. அந்த வீட்டில் சசிகலாவும், அவரது உறவினர்களும், திடீரென்னு ஒருநாள் நுழைந்து பதிவாளர் மற்றும் பிற அரசு அதிகாரிகளுடன் சென்று, கங்கை அமரனையும் அவருடைய மனைவியையும் மிரட்டி கையெழுத்துப் போட வைத்துள்ளனர்.

 
 
அந்த வீட்டின் மதிப்பு பலகோடியாக இருந்தாலும் சசிகலா தரப்பு கங்கை அமரனுக்கு வெறும் 13 லட்சம் மட்டும் கொடுத்துள்ளனர். மேலும் சசிகலா தரப்பு இது போன்று பல இடங்களில் சொத்துக்களை அபகரித்ததை இந்த வீடியோ காட்சி விவரிக்கிறது. அறப்போர் இயக்கத்தின் இந்த ஆய்வுப்படம் தற்போது நல்ல வரவேற்பை பெற்று அதிகம் பேரல் பார்க்கப்படுகிறது.