திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 6 ஜூன் 2017 (11:40 IST)

எல்லாம் உன்னோட அவசரத்தாலதான்: தினகரனிடம் கொந்தளித்த சசிகலா!

எல்லாம் உன்னோட அவசரத்தாலதான்: தினகரனிடம் கொந்தளித்த சசிகலா!

பரபரப்பான அரசியல் சூழலில் பெங்களூரு சிறையில் உள்ள அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளர் சசிகலாவை திகார் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த டிடிவி தினகரன் நேற்று அவரது மனைவி அனுராதாவுடன் சென்று சந்தித்தார்.


 
 
அதிமுக அம்மா அணியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட தினகரன் தான் மீண்டும் கட்சி பணிகளில் ஈடுபட இருப்பதாக அறிவித்தது அதிமுக அம்மா அணியில் பதற்றத்தை ஏற்படுத்தியது. தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் கருத்துக்கள் கூறி வந்தனர்.
 
இந்த சூழலில் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 10 பேருடன் தினகரன் நேற்று பெங்களூரு சென்றார். தனது ஆதரவாளர்களை வெளியில் காத்திருக்க வைத்துவிட்டு சிறையினுள் தினகரனும், இளவரசியின் மகன் விவேக்கும் சசிகலாவை சந்திக்க சென்றனர்.
 
இந்த சந்திப்பின் போது தினகரன் மீது இருந்த கோபத்தை சசிகலா வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. தினகரனை சசிகலா சந்தித்ததும், இவ்வளவு பிரச்னையே வந்திருக்காது, எல்லாம் உன்னோட அவசரத்தாலதான் வந்தது. உன்னை துணைப் பொதுச் செயலாளர் ஆக்கிட்டு வந்தேன். நீ எல்லாத்தையும் கெடுத்துகிட்ட என கொந்தளித்ததாக கூறப்படுகிறது.
 
மேலும் உனக்கு ஆதரவாக 11 எம்எல்ஏக்களை வைத்துக்கொண்டு நீ ஒன்னும் பன்ன முடியாது. நீ என்ன செய்தாலும் ஆட்சிக்கு எந்த வகையிலும் ஆபத்தோ, சிக்கலோ வந்துவிடக்கூடாது என சசிகலா தினகரனிடம் கண்டிப்புடன் கூறியதாக தகவல்கள் வருகின்றன.