வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 6 மார்ச் 2024 (15:55 IST)

சரத்குமாரின் வரவு பாஜக கூட்டணிக்கு உந்துசக்தி-அண்ணாமலை

Annamalai
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட  தேசிய கட்சிகளும், திமுக, திரிணாமுல், ஆம் ஆத்மி, சமாஜ்வாடி உள்ளிட்ட  மாநில கட்சிகளும் கூட்டணி பற்றியும் தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
 
கடந்த சனிக்கிழமை, பாஜக சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிடும்  முதற்கட்ட  வேட்பாளர் பட்டியல் வெளியான  நிலையில் சென்னையில் நேற்று நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியிருந்தார். இதில், ஆளுங்கட்சியான திமுகவை கடுமையாக விமர்சித்திருந்தார்.
 
இந்த நிலையில், தமிழ் நாட்டில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியாகும்,யாருடன் கூட்டணி என்ற கேள்வி எழுந்தது.
 
இந்த நிலையில். தமிழ் நாட்டில் போட்டியிடும் பாஜக  வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்ய  இன்று மத்திய அமைச்சர் எல்.முருகன்,    மாநில தலைவர் அண்ணாமலை, உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் டெல்லி செல்கின்றனர்.
 
தேசிய தலைமையில் விரைவில் வெளியிடப்படும் 2 ஆம் கட்ட வேட்பாளர்காள் பட்டியலில் தமிழ் நாட்டின் வேட்பாளர்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில், இன்று சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியுடனான கூட்டணியை  பாஜக உறுதி செய்துள்ளது.
 
இதுகுறித்து அண்ணாமலை தெரிவித்துள்ளதாவது:
 
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு  நரேந்திரமோடி  அவர்களின் பத்தாண்டு கால, ஊழலற்ற, நேர்மையான அரசின் செயல்பாடுகள் மீது முழு நம்பிக்கை கொண்டும், தேச நலனிற்காகவும், ஒருமைப்பாட்டிற்க்காகவும் நமது பிரதமர் அவர்கள் முன்னெடுக்கும் திட்டங்களால் ஈர்க்கப்பட்டும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து செயல்பட முன்வந்திருக்கும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர், அண்ணன் திரு சரத்குமார்  அவர்களை  தமிழக பாஜக  சார்பாக வரவேற்று மகிழ்கிறோம்.
 
வரும் பாராளுமன்றத் தேர்தலில், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு  நரேந்திரமோடி 
அவர்கள், 400 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்கவிருக்கும் நேரத்தில், தேசியத்தின் மற்றுமொரு குரலான அண்ணன் திரு சரத்குமார் அவர்கள் வரவு, தமிழகத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு நிச்சயம் உந்துசக்தியாக அமையும் என்பது உறுதி ''என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் நடிகர் சரத்குமார், ''வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடனான அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் கூட்டணி பேச்சுவார்த்தை நிறைவு என்று அறிக்கை வெளியிட்டுள்ளது ''குறிப்பிடத்தக்கது.