1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 14 மார்ச் 2022 (11:05 IST)

எப்ப இந்த பேச்சை நிறுத்த போறோம்! – உடை சர்ச்சை குறித்து சமந்தா கேள்வி!

சமீபத்தில் சமந்தா பகிர்ந்த புகைப்படம் குறித்து பலரும் பல்வேறு கருத்துகளை பேசியது குறித்து சமந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரபலமான நடிகையான சமந்தா சமீபத்தில் நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்த நிலையில் சமூக வலைதளத்தில் அவர் அடிக்கடி பேசுபொருளாகி வருகிறார். சமீபத்தில் ஒரு போட்டோஷூட் புகைப்படங்களை சமந்தா பகிர்ந்திருந்த நிலையில் அவர் குறித்து சிலர் வன்மமான சொற்களை பயன்படுத்தி பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ள சமந்தா “ஒரு பெண்ணை இந்த சமூகம் உடை, இனம், கல்வி, சமூக நிலை என பெரிய பட்டியலையே வைத்துதான் மதிப்பிடுகிறது. நாம் 2022ல் இருக்கிறோம் எப்போது இதுபோன்ற விஷயங்களை நிறுத்த போகிறோம்? இனியாவது மற்றவர்களை பெருந்தன்மையுடன் புரிந்து கொள்ள முயற்சிப்போம்” என்று கூறியுள்ளார்.