வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 14 பிப்ரவரி 2024 (07:05 IST)

நான் மனம் கலங்க மாட்டேன், சேவையை தொடர்வேன்: மகன் இறுதிச்சடங்கிற்கு பின் சைதை துரைசாமி பேச்சு..!

சமீபத்தில் காலமான முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் இறுதி சடங்கு நேற்று நடைபெற்ற நிலையில் இறுதி சடங்கு பின் பேட்டியளித்த சைதை துரைசாமி, மனம் கலங்க மாட்டேன் என்றும் தனது சேவையை தொடருவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இமாச்சலப் பிரதேசத்தில் நடந்த விபத்தில் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி அகால மரணம் அடைந்த நிலையில் நேற்று அவரது உடல் சென்னை கொண்டுவரப்பட்டு ஈமச்சடங்கு செய்யப்பட்டது.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசியது சைதை துரைசாமி எனக்கு ஆறுதல் கூறிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி. நான் மனம் கலங்க மாட்டேன், சேவையை பிரதானப்படுத்தி வாழ்க்கையை அமைத்துக் கொள்வேன் என இந்த நாளில் நான் சூளுரை கொள்கிறேன்.

ஒரு மகன் போனாலும் ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவிகளில் இருக்கும் மகன்கள், மகள்கள் எனக்கு இருக்கின்றனர். இங்குள்ள அனைத்து சமூகத்தை சார்ந்தவர்களையும் அரசு பணியில் சேர்க்க வைக்க முயற்சிப்பேன். இதனை இந்த நேரத்தில் நான் உறுதியாக எடுத்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் .  

Edited by Siva