திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 17 ஆகஸ்ட் 2019 (12:52 IST)

யாரும் படிக்கவே வேணாம்.. பொழப்பு நல்லா ஓடும் – திருமாவை கிண்டல் செய்த எஸ்.வி.சேகர்

புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக பரப்புரை செய்ய வேண்டும் என தன் தொண்டர்களுக்கு திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளதை ட்விட்டரில் கேலி செய்திருக்கிறார் எஸ்.வி.சேகர்.

இன்று விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் பிறந்த நாள் அவர் கட்சியினரால் கொண்டாடப்பட்டது. அதில் கலந்து கொண்டு பேசிய திருமாவளவன் புதிய கல்விக் கொள்கைகளுக்கு எதிராக பரப்புரை நிகழ்த்துமாறு தன் தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டார்.

இதற்கு நடிகரும், பா.ஜ.க பிரமுகருமான எஸ்.வி.சேகர் கேலி செய்யும் தோனியில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் “அதென்ன புதிய கல்வி கொள்கைக்கு எதிராக?! கல்விக்கு எதிரான பரப்புரை செய்தாலே கூட்டம் குவியுமில்ல.. பொழைப்பும் ஓடும்” என கூறியுள்ளார்.

இதற்கு எஸ்.வி.சேகரின் பதிவில் எஸ்.வி.சேகர் ஆதரவாளர்களும், திருமா ஆதரவாளர்களும் கமெண்டில் சண்டையிட்டு வருகின்றனர்.