வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 23 ஜூன் 2017 (09:36 IST)

நடிகர் கவுண்டமணிக்கு என்ன ஆச்சு?: மரண செய்திக்கு மறுப்பு!

நடிகர் கவுண்டமணிக்கு என்ன ஆச்சு?: மரண செய்திக்கு மறுப்பு!

தமிழ் சினிமா உலகில் தன்னுடைய நகைச்சுவை நடிப்பால் கவுண்டமணி தனக்கென தனி இடம் பிடித்தவர். இவருடைய நகைச்சுவையை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. இந்நிலையில் அவரை குறித்து சமீப காலமாக வதந்திகள் பரவி வருகிறது.


 
 
நடிகர் கவுண்டமணி சில வருடங்களுக்கு முன்னர் அதிகமாக சினிமாக்களில் நடிக்காமல் சிறிது காலம் ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் மீண்டும் தனது நடிப்பில் கவனம் செலுத்தி தொடர்ந்து நடித்து வருகிறார்.
 
ஆனால் அவ்வப்போது நடிகர் கவுண்டமணி இறந்து விட்டார் என யாரோ விஷமிகள் செய்திகளை பரப்பி விட்டு வருகின்றனர். அதன் பின்னர் தான் நலமாக இருப்பதாக அவரும் விளக்கம் அளித்து வந்தார்.
 
இந்நிலையில் நேற்று மீண்டும் நடிகர் கவுண்டமணி மாரடைப்பால் மரணமடைந்ததாக சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக செய்திகள் பரவின. இதனால் அவரது ரசிகர்கள், அவருக்கு நெருக்கமானவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
 
இதனையடுத்து நடிகர் கவுண்டமணி தன்னை பற்றி தவறான தகவலை பரப்பும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது வழக்கறிஞர் மூலம் காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
 
மேலும் நடிகர் கவுண்டமணி நலமாக இருப்பதாகவும், திரைப்படங்கள் சார்ந்த பணிகளிலும், கதை விவாதங்களிலும் தினமும் அவர் பிஸியாக இருப்பதாக கவுண்டமணியின் செய்தி தொடர்பாளர் விஜயமுரளி கூறியுள்ளார்.