வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 23 ஆகஸ்ட் 2023 (08:01 IST)

இது திமுகவின் கருத்து அல்ல, என்னுடைய தனிப்பட்ட கருத்து.. ஈபிஎஸ்-க்கு கொடுத்த பட்டம் குறித்து ஆர்.எஸ்.பாரதி..!

சமீபத்தில் மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் எடப்பாடி பழனிச்சாமிக்கு புரட்சித்தமிழர் என்ற பட்டம் கொடுத்த நிலையில் இந்த பட்டம் குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி ஒரு கருத்தை தெரிவித்து இது திமுகவின் கருத்தை அல்ல தனது தனிப்பட்ட கருத்து என்று தெரிவித்துள்ளார்.  
 
அதிமுக மாநாட்டில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு புரட்சி தமிழர் என்ற பட்டம் வழங்கப்பட்டது. இந்த பட்டம் குறித்து கருத்து தெரிவித்த ஆர்.எஸ்.பாரதி புரட்சித்தமிழர் என்ற பட்டம் எடப்பாடி பழனிசாமிக்கு என்றால் எம்ஜிஆர் மலையாளி, ஜெயலலிதா கன்னடம் நான் மட்டும்தான் தமிழர் என்று எடப்பாடி பழனிச்சாமி சொல்கிறாரா என்று தோன்றுகிறது என்று தெரிவித்தார். 
 
மேலும் இது திமுகவின் கருத்து அல்ல என்றும் என்னுடைய தனிப்பட்ட கருத்து என்றும் திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி தெரிவித்துள்ளார் மற்ற புள்ளி
 
Edited by Siva