1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 17 ஜூன் 2021 (12:31 IST)

ரூ.61 கோடியில் குறுவை சாகுபடி திட்டம்

ரூ.61 கோடியில் குறுவை சாகுபடி திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். 
 
ஆம், ரூ.61 கோடியில் குறுவை நெல் சாகுபடி திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்கள் முழுவதும் குறுவை சாகுபடி திட்டம் செயல்படுத்தப்படும் என அவர் கூறியுள்ளார். கடலூர், அரியலூர், திருச்சி மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளில் திட்டம் செயல்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.