வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 29 பிப்ரவரி 2024 (16:14 IST)

40 ரூபாய் டிக்கெட் எடுத்தால் கிளாம்பாக்கத்திலிருந்து எங்கும் செல்லலாம்! புதிய வசதி அறிமுகம்..!

40 ரூபாய் டிக்கெட் எடுத்து  கிளாம்பாக்கத்திலிருந்து சென்னையில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்ற புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
 
தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கிளாம்பாகத்தில் இருந்து தான் கிளம்ப வேண்டும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்தில் முன்பதிவு செய்யும் பயணிகள் 40 ரூபாய் கூடுதலாக செலுத்தி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து சென்னையில் உள்ள எந்த இடங்களுக்கு வேண்டுமானாலும் மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் நான்கு மணி நேரத்திற்குள் பயணம் செய்து கொள்ளலாம் என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
 
இந்த டிக்கெட்டை மாநகரப் போக்குவரத்து கழக செயலின் மூலம் வெளியிடப்படும் என்றும் போக்குவரத்து அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் முன்பதிவு செய்யும்போதே கூடுதலாக 40 ரூபாய் செலுத்திக் கொள்ளலாம் என்றும் இதனால் காலவிரயம் இன்றி கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னையில் எந்த பகுதிக்கு வேண்டுமானாலும் சென்று கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
 இந்த திட்டம் மார்ச் ஒன்றாம் தேதி முதல் செயல்படுத்த உள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார்
 
Edited by Siva