வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Modified: திங்கள், 25 ஏப்ரல் 2016 (14:42 IST)

அதிமுக பிரமுகர் வீட்டில் 4.7 கோடி பறிமுதல் - தேர்தல் அதிகாரிகள் அதிரடி

நேற்று இரவு எக்மோர்-யில் உள்ள ஆதிமுக பிரமுகர் விஜய் கிருஷ்ணன் வீட்டில் 4.7 கோடி பறிமுதல் செய்யப்பட்டது என்று தேர்தல் அதிகாரி ராஜெஷ் லக்கானி கூறினார்.
 

 
சென்னை மாவட்ட தேர்தல் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், தேர்தல் பறக்கும் படையினர் அதிமுக-வை சேர்ந்த விஜய் என்பவரது வீட்டில் மாலை 4.30 மணி முதல் 8.15 மணி வரை சோதனை நடத்தினர்.
 
சோதனையின்போது, விஜய் வீட்டில் இரண்டு அட்டைப் பெட்டிகளில் பணம் மூட்டைக்கட்டி வைக்கப்பட்டிருந்தது. இந்த தகவல் வருமான வரித் துறைக்கு தெரிவிக்கப்பட்டு, 4.7 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை மாநில தலைமை தேர்தல் ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.