1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 17 அக்டோபர் 2022 (16:12 IST)

போக்குவரத்து விதிகளை மீறியதாக ரூ.23.25 கோடி அபராதம் - காவல்துறை

போக்குவரத்து  விதிகளை மீறியதாக சென்னையில் ரூ.23.25 கோடி அபராதம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நடக்கும் வாகன விபத்துகளில் அதிகமாக நடப்பது இரு சக்கர வாகனங்களால்தான் என புள்ளி விவரங்கள் கூறுகின்றன. பெரும்பாலான விபத்துகளில் உயிரிழப்பு அல்லது படுகாயம் அடைவதற்கு முக்கியக் காரணமாக இருப்பது ஹெல்மெட் அணியாமல் இருப்பதுதான். அதனால் இருசக்கரவாகனங்களில் பயணம் செய்யும்போது ஓட்டுபவர் மட்டும் இல்லாமல் பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது. இதை நடைமுறைப்படுத்த காவல்துறையும் கடுமையாகப் போராடி வருகிறது.

 
இந்த நிலையில், கடந்த 6 மாதங்களில் மட்டும் போக்குவரத்து  விதிகளை மீறியதாக சென்னையில் ரூ.23.25 கோடி அபராதம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், வாகனத்திற்கு எதாவது வழக்குகள் நிலுவையில் இருக்கிறதா என்று ஆன்லைனில் சரிபார்க்குமாறு மக்களை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதன் படி ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டுபவர்களுக்கு ரூ 100க்குப் பதில் ரூ 500 ஆகவும், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டினால் ரூ.2 ஆயிரம் அபராதத்துக்குப் பதில் ரூ.10 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Edited by Sinoj