வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 17 அக்டோபர் 2022 (13:45 IST)

ஒருவாரத்தில் மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் தள்ளுபடி : அமைச்சர் ஐ பெரியசாமி

Periyasamy
இன்னும் ஒரு வாரத்தில் மகளிர் சுய உதவி குழுக்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அமைச்சரவை ஐ பெரியசாமி தெரிவித்துள்ளார் 
 
தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றவுடன் மகளிர் சுய உதவி கடனை தள்ளுபடி செய்து பல லட்சம் பெண்கள் பயனடையும் நடவடிக்கை எடுத்து வருகிறார்
 
இன்னும் ஒரு வாரத்திற்குள் அதற்கான பணிகள் முடிக்கப்பட்டு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டது போல் மகளிர் சுய உதவி குழுக்களின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான ரசீது வழங்கப்படும் என்று அமைச்சர் ஐ பெரியசாமி தெரிவித்துள்ளார் 
 
மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடியில் தகுதியானவர்கள் யாராக இருந்தாலும் தள்ளுபடியை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 

Edited by Mahendran