செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 27 ஜூன் 2024 (07:25 IST)

தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் த.அமல்ராஜ் மருத்துவ சிகிச்சை: ரூ2 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவு..!

Stalin
தனியார் தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் த.அமல்ராஜ் மருத்துவ சிகிச்சைக்காக ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
 
ஜெயா தொலைக்காட்சியில் மூத்த ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிவரும் திரு.த.அமல்ராஜ் அவர்கள் தற்பொழுது நோய்வாய்ப்பட்டு. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில், தொடர்ந்து மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ள போதிய பண வசதி இல்லாத நிலையில், அவருக்கு அரசு மருத்துவ மனையில் தரமான சிகிச்சை மேற்கொள்ளவும், தனியார் மருத்துவமனையில் மேற்கொண்ட சிகிச்சை கட்டணம் செலுத்திட கூடுதல் நிதியுதவி வழங்கிடுமாறு அனைத்து பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மூலம் இன்று (26.06.2024) முற்பகல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு வரப்பெற்றது.
 
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிசிச்சை பெற்றுவரும் திரு.த.அமல்ராஜ் அவர்களை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றி தரமான சிகிச்சை அளிக்கவும், அவர் கோரியுள்ள கூடுதல் நிதியுதவியாக ரூ.2 இலட்சத்தினை உடனடியாக வழங்கிட உத்தரவிட்டார்கள்.
 
மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவினைத் தொடர்ந்து திரு.த.அமல்ராஜ் அவர்கள் உடனடியாக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்து அவருக்கு தரமான சிசிச்சைகளை வழங்கிடவும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், திரு.த.அமல்ராஜ் அவர்கள் தனியார் மருத்துவமனையில் மேற்கொண்ட சிகிச்சைக்கான கட்டணத் தொகையை செலுத்திட ஏதுவாக தமிழ்நாடு அரசின் பத்திரிகையாளர் நல நிதியத்திலிருந்து ரூ. 2 இலட்சத்திற்கான காசோலை அவரின் குடும்பத்தினரிடம் இன்று ( 26.06.2024) பிற்பகல் வழங்கப்பட்டது.
 
பத்திரிகையாளர் நலன்களை பேணிக்காப்பதில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் திரு.த.அமல்ராஜ் அவர்களின் உடல் நலக் குறைவு குறித்து தகவல் பெறப்பட்ட ஒரு சில மணித்துளிகளில் இந்த நிதியுதவினையும், அரசு மருத்துவமனையில் சிகிச்சையும் வழங்கிட உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
 
Edited by Siva