திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 2 அக்டோபர் 2023 (08:10 IST)

திருநங்கைகளுக்கும் விரைவில் மகளிர் உரிமைத்தொகை: அமைச்சர் கீதா ஜீவன் தகவல்..!

geetha jeevan
தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமை தொகை 1000 ரூபாய் வழங்கப்பட்ட நிலையில் அடுத்த கட்டமாக திருநங்கைகளுக்கும் வழங்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
 
திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கத்தில் கலந்துகொண்ட அவர் இது குறித்து கூறிய போது  திருநங்கைகளுக்கும் விரைவில் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்றும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இது குறித்து அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் தெரிவித்தார்.  
 
எனவே மகளிர்களை அடுத்து திருநங்கைகளுக்கும் விரைவில்  உரிமைத் தொகை ஆயிரம் கிடைக்கும் என்பது இந்த அறிவிப்பின் மூலம் தெரிய வந்துள்ளது.
 
Edited by Siva