வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 25 ஏப்ரல் 2019 (09:02 IST)

அந்த வலி எனக்கு தெரியும்: கோல்ட் கேர்ள் கோமதிக்கு ரூ.1 லட்சம் கொடுத்த நடிகர்!

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் பிரிவில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது தெரிந்ததே. இருப்பினும் தமிழக அரசு உள்பட எந்த பிரபலங்களும் இதுவரை அவருக்கு பரிசுத்தொகை எதையும் அறிவிக்கவில்லை. கோடி கோடியாய் சம்பளம் வாங்கும் பெரிய நடிகர்கள் கூட வாழ்த்துக்களோடு நிறுத்திவிட்ட நிலையில் காமெடி நடிகர் ரோபோசங்கர் தனது அன்பளிப்பாக சகோதரி கோமதிக்கு ரூபாய் ஒரு லட்சம் வழங்கவிருப்பதாக அறிவித்துள்ளார். 
 
தந்தையை இழந்து, பயிற்சியாளரையும் இழந்தாலும், தன்னம்பிக்கையை மட்டும் இழக்காமல் விடா முயற்சியால் கோமதி செய்த பயிற்சிக்கு கிடைத்த பரிசே இந்த தங்கம் என்று கூறிய ரோபோ சங்கர், நானும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவன் என்பதால் அந்த ஏழ்மையின் வலி எனக்கு தெரியும். எனவே அன்புச்சகோதரி கோமதிக்கு ஒரு லட்ச ரூபாய் என்ற ஒரு சின்ன பரிசை அன்பளிப்பாக வழங்குவதில் ஒரு தமிழனாக பெருமைப்படுகிறேன் என்று வீடியோ ஒன்றில் ரோபோசங்கர் தெரிவித்துள்ளார்.
 
ஏற்கனவே நடிகர் ரோபோசங்கர், புல்வாமா தாக்குதலின்போது வீரமரணம் அடைந்த தமிழக வீரர்களின் குடும்பத்திற்காக நிதியுதவி செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது