வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 25 ஏப்ரல் 2019 (08:58 IST)

நவீனத் தீண்டாமை என்று ஒன்று இல்லை – காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரு கருத்து !

நவீனத்தீண்டாமையை திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் கடைபிடிப்பதாக பாமகவின் குற்றச்சாட்டுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி பதில் அளித்துள்ளார்.

தமிழக தேர்தலை அடுத்து பொன்பரப்பி சம்பவம் தமிழக அரசியலில் தொடர்ச்சியாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைப் பாமகவும் பாஜகவும்தான் தூண்டி விட்டதாக திமுகக் கூட்டணி கட்சிகள் தெரிவித்து வருகின்றன. பாமகவுக்கு எதிராகக் கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

இதனை மறுக்கும் விதமாக பாமக திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தான் நவீனத்தீண்டாமையைக் கடைபிடிக்கின்றன எனக் கூறியுள்ளது. இதற்கு தமிழக காங்கிரஸின் தலைவர் கே எஸ் அழகிரி மறுப்புத் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘ நவினத் தீண்டாமை என்று ஒன்று கிடையாது. தீண்டாமையை திமுகவோ, காங்கிரஸோ, பொதுவுடமைக் கட்சியோ என்றைக்கும் கடைபிடித்தது இல்லை, மூன்று கட்சிகளுமே தீண்டாமைக்கு எதிரானவை. அதை ஒழிக்க கடுமையாகப் போராடியவை. அதற்கான வரலாற்றுத் தரவுகள் உள்ளன. எனவே பாமக அப்படி கூறியதற்கு நான் வருந்துகிறேன்’ எனக் கூறியுள்ளார்.