வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 23 ஆகஸ்ட் 2020 (19:51 IST)

அடுத்தடுத்து 5 கடைகளில் கொள்ளை: சென்னை அருகே அதிர்ச்சி சம்பவம்

அடுத்தடுத்து 5 கடைகளில் கொள்ளை:
சென்னை அருகே ஆவடி பகுதியில் அடுத்தடுத்து ஐந்து கடைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கொள்ளை நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சென்னை அருகே உள்ள ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் என்ற பகுதியில் கடந்த வாரத்தில் இரவு நேரத்தில் பூட்டிய கடைகளில் கதவை உடைத்து பணம் மற்றும் பொருட்கள் கொள்ளை அடிக்கும் சம்பவம் அதிகமாக நடைபெற்று வந்த நிலையில் திருமுல்லைவாயிலில் உள்ள பகுதியில் உள்ள 5 கடைகளில் பூட்டுகளை உடைத்து சுமார் ஒன்றரை லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக வெளிவந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
கடந்த வாரம் கொள்ளை நடந்த நிலையில் நேற்றும் திருமுல்லைவாயில் பகுதியில் உள்ள மளிகை கடையில் இரும்பு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கல்லாப்பெட்டியில் இருந்து 50 ஆயிரம் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
இந்த நிலையில் இந்த கொலை சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சிசிடிவி காட்சிகள் மூலம் கொள்ளையர் ஒரு வட மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் கடையின் ஷட்டரை இரும்பு ராடு கொண்டு உடைக்கும் காட்சியும் அந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இதனை அடுத்து கொள்ளையர்களை கண்டு பிடிக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்