செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 10 ஜூலை 2024 (18:35 IST)

68 இடங்களில் கொள்ளையடித்து ரூ.4 கோடிக்கு நூற்பாலை வாங்கியவர்.. குறி வைத்து பிடித்த போலீசார்..!

தமிழகம் முழுவதும் 68 இடங்களில் கொள்ளை அடித்து கொள்ளையடித்த பணத்தில் நான்கு கோடி ரூபாய்க்கு நூற்பாலை வாங்கி தொழிலதிபராக மாறிய ஒருவரை போலீசார் குறிவைத்து பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் 68 கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதாக ராட்மேன் மூர்த்தி என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்ட நிலையில் அவரை தொடர்ந்து போலீசார் கண்காணித்து வந்தனர்.

இதனை அடுத்து விருதுநகர் மாவட்டத்தில் நான்கு கோடி ரூபாய்க்கு ராட்மேன் மூர்த்தி நூற்பாலை வாங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்த நிலையில் இது குறித்து விசாரணை செய்த போது கொள்ளையடித்த பணத்தில் தான் அவர் நூற்பாலை வாங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து மூர்த்தி மற்றும் அவரது கூட்டாளி அம்சராஜ் ஆகிய இருவரும் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை செய்த போது தமிழ்நாடு முழுவதும் 68 கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதாகவும் அதன் மூலம் 1500 சவரன் தங்க நகைகளை கொள்ளை அடித்ததாகவும் தெரிய வந்துள்ளது.

68 கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு கிடைத்த பணத்தில் தான் ராடுமேன் மூர்த்தி மற்றும் அவரது கூட்டாளி நூற்பாலை வாங்கியது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran