வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 29 ஜனவரி 2024 (10:11 IST)

கீழ்வெண்மணி கிராமத்துக்கு சென்று அதிர்ச்சி அடைந்தேன்: கவர்னரின் பதிவால் பரபரப்பு..!

governor ravi
நாகையில் கிராமங்கள் மோசமான வறுமை நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன் என ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:
 
"நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வெண்மணி கிராமத்துக்குச் சென்று, '1968' படுகொலையில் உயிர் பிழைத்த ஒரே நபரான திரு.ஜி. பழனிவேலை சந்தித்தேன். 
மீனவர்கள் வசிக்கும் நம்பியார் நகரையும், பட்டியலின சமூகத்தினர் வாழும் ஜீவா நகரையும் பார்வையிட்டேன். கிராமங்கள் முழுவதும் மோசமான வறுமை நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன்.
 
இந்த துரதிருஷ்டவசமான சகோதர, சகோதரிகள் சமூக மற்றும் பொருளாதார நீதிக்காக இன்னும் எத்தனை காலம் காத்திருக்க வேண்டும் என ஒருவரால் வியக்க மட்டுமே முடியும்." - ஆளுநர் ரவி
 
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வெண்மணி கிராமத்துக்கு சென்ற ஆளுநர் ரவி பட்டியலின சமூகத்தினர் வாழும் ஜீவா நகரையும் பார்வையிட்டார். அதன்பின் அவர் எழுப்பியுள்ள கேள்வி தான் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
 
Edited by Mahendran