ஆர்.எம் வீரப்பன் உடல் 78 குண்டுகள் முழங்க தகனம்! தேர்தல் ஆணைய ஒப்புதலுடன் அரசு மரியாதை!
மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம் வீரப்பன் அவர்களின் உடல் 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதை உடன் உடல் தகனம் செய்யப்பட்டதாகவும் இதற்காக தேர்தல் ஆணையத்திடம் சிறப்பு அனுமதி பெறப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
எம்ஜிஆர், ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக இருந்த ஆர்எம் வீரப்பன் நேற்று காலமான நிலையில் அவருக்கு பல அரசியல்வாதிகள் மற்றும் திரையுலக பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில் அதிமுக அமைச்சராக இருந்தாலும் முன்னாள் முதல்வர் கருணாநிதி உடன் நெருக்கமாக இருந்தவர் ஆர்.எம் வீரப்பன் என்றும் எம் ஜி ஆர் கழகம் என்ற அமைப்பை தொடங்கி திமுகவுடன் கூட்டணி அனைத்து போட்டியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக வயது முதிர்வு காரணமாக அரசியலில் இருந்து விலகி இருந்த ஆர்.எம் வீரப்பன் நேற்று அவர் காலமானார். முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேற்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய நிலையில் தற்போது அவரது உடல் அரசு மரியாதை உடன் இறுதி சடங்கு நடத்தப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்திருந்தது
இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு அனுமதி பெற்று ஆர்.எம் வீரப்பன் உடல் 78 குண்டுகள் முழங்க இன்று உடல் தகனம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva