1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: திங்கள், 10 ஏப்ரல் 2017 (04:30 IST)

சில துரோகிகளின் சூழச்சி தான் இது: தேர்தல் ரத்து குறித்து டிடிவி தினகரன்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் இரண்டு நாள் மட்டுமே இருக்கும் நிலையில் அளவுக்கதிகமான பணப்பட்டுவாடா செய்தது நிரூபணம் ஆனதால் தேர்தலை ரத்து செய்ய அதிரடியாக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனால் டிடிவி தினகரன் உள்பட அந்த தொகுதியின் வேட்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


 


தேர்தல் ரத்து குறித்து டிடிவி தினகரன் கூறியதாவது: அதிமுக அம்மா அணி தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறும் என்பதை அறிந்த சில துரோகிகளின் சூழச்சி தான் இது. நான் வெற்றி பெறுவேன் என்று தெரிந்ததால் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.  தேர்தல் பணியில் ஈடுபட்ட தொண்டர்களின் உழைப்பு அனைத்தும் வீணாகிவிட்டது.

இருப்பினும். எத்தனை சதி நடந்தாலும் நான்கு ஆண்டுகள் முழுமையாக ஆட்சியை நிறைவு செய்வோம். தன்னிடம் உள்ள அதிகாரத்தை கொண்டு தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை ரத்து செய்துள்ளது. ஆனால் தேர்தலை ரத்து செய்திருப்பது ஜனநாயகப்படுகொலை என்று டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் திமுகவும் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சியை கலைக்க முயற்சி செய்து வருவதாகவும், அதிமுகவை அழிக்க சிலர் சதி செய்து வருகின்றனர் என்றும், அவர்கள் யார் என்பது விரைவில் தெரியவரும் என்றும் டிடிவி தினகரன் கூறினார்.