செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 4 ஏப்ரல் 2017 (15:38 IST)

ஆர்கே நகரில் பெரிய கலவரம் வர வாய்ப்பு: தேர்தலை தடுக்க சதி!

ஆர்கே நகரில் பெரிய கலவரம் வர வாய்ப்பு: தேர்தலை தடுக்க சதி!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்ததை அடுத்து அவரது ஆர்கே நகர் தொகுதிக்கு வரும் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலை எப்படியாவது தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சிலர் சதி செய்து வருவதாக முன்னாள் எம்பி கே.சி.பழனிச்சாமி கூறியுள்ளார்.


 
 
ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் அதிமுக சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக பிளவுபட்டுள்ளது. இதனால் யார் உண்மையான அதிமுக என்பதை நிரூபிக்கும் களமாக இந்த தேர்தல் அமைந்துள்ளது. சசிகலா அணியில் டிடிவி தினகரனும், ஓபிஎஸ் அணியில் மதுசூதனனும் களத்தில் உள்ளனர்.
 
இவர்கள் இருவரும் இந்த தேர்தலில் தாங்கள் தான் வெற்றி பெற வேண்டும் என பல்வேறு பிரச்சார யுக்திகளை கையாண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த தேர்தலை நடத்தவிடாமல் தடுக்க பெரிய சதியே நடக்கிறது என ஓபிஎஸ் அணியின் முன்னாள் எம்பி கே.சி.பழனிச்சாமி கூறியுள்ளார்.
 
தனியார் தமிழ் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய கே.சி.பழனிச்சாமி, ஆர்கே நகர் இடைத்தேர்தலை தடுக்க பெரிய சதியே நடக்கிறது. கலவரத்தின் மூலம் தேர்தலை தள்ளிவைக்க முயற்சிகள் நடைபெறுகின்றன. மேலும், என்ன நடந்தாலும் ஆர்கே நகர் தொகுதி தேர்தல் முடிவுக்குப் பின்னர் தமிழகம் ஒரு கூவத்தூரை சந்திக்கும் என அவர் தெரிவித்தார்.