1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 20 மார்ச் 2023 (18:40 IST)

சென்னையில் நடைபெற்ற ரெட்டிகான்: விழித்திரை மீது இந்தியாவின் மிகப்பெரிய கருத்தரங்கு

Press
●        ஒரு நாள் நிகழ்வான இக்கருத்தரங்கை மத்தியச் சென்னையின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தயாநிதி மாறன் தொடங்கி வைத்தார்

●        இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்திருக்கும் 1000-க்கும் அதிகமான கண் அறுவைசிகிச்சை நிபுணர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்


 
சென்னை, மார்ச் 19, 2023: டாக்டர் அகர்வால்ஸ் ரெட்டினா ஃபவுண்டேஷனால் விழித்திரை அறுவைசிகிச்சை மீது நடத்தப்படும் இந்தியாவின் மிகப்பெரிய வருடாந்திர கருத்தரங்கான ரெட்டிகான் – ன் 13 வது பதிப்பு இன்று சென்னையில் சிறப்பாக நடத்தப்பட்டது. இந்தியாவிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் 1000-க்கும் அதிகமான கண் மருத்துவ நிபுணர்கள் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டனர். மத்தியச் சென்னை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தயாநிதி மாறன் அவர்கள், இக்கருத்தரங்கு நிகழ்வில் பாரம்பரியமான குத்துவிளக்கை ஏற்றி தொடங்கி வைத்தார்.  இத்தொடக்க நிகழ்வின் டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் தலைவர் பேராசிரியர் அமர் அகர்வால், இதன் செயலாக்க இயக்குனர் மற்றும் மருத்துவ சேவைகளின் தலைவர் டாக்டர். அஸ்வின் அகர்வால் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகின்ற விழித்திரை கோளாறு சிகிச்சை மேலாண்மைக்கான சமீபத்திய தொழில்நுட்பங்கள் மற்றும் செயல்முறைகள் மீதான நிகழ்நிலை தகவலையும், அறிவையும் பெறுவதற்காக விழித்திரைக்கான சிறப்பு நிபுணர்களையும் மற்றும் மருத்துவர்களையும் ரெட்டிகான் 2023 கருத்தரங்கு, ஒரு அமைவிடத்தில் ஒருங்கிணைக்கிறது.  விழித்திரைக்கு மருந்துகளின் மூலம் சிகிச்சை, விழித்திரைக்கான அறுவைசிகிச்சை மற்றும் விழிப்படிக - விழித்திரை அறுவைசிகிச்சை ஆகிய தலைப்புகள் மீது இக்கருத்தரங்கின் அமர்வுகள் நடத்தப்பட்டன.  விழிப்படிக – விழித்திரை சிகிச்சை என்ற சிறப்பு பிரிவில் நோயறிதலுக்கான நவீன செயல்முறைகள் மற்றும் சிகிச்சைக்கான பல்வேறு விருப்பத்தேர்வுகளை புரிந்துகொள்ள மருத்துவ முதுகலை பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பொது கண் மருத்துவர்களுக்கு ஒரு தனிச்சிறப்பான வாய்ப்பை ரெட்டிகான் கருத்தரங்கு வழங்குகிறது.

டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவர் பேராசிரியர் டாக்டர். அமர் அகர்வால், இந்நிகழ்ச்சியில் உரையாற்றியபோது கூறியதாவது: “ரெட்டிகான் கருத்தரங்கின் 13-வது பதிப்பு நிகழ்வு மிகப்பெரிய வெற்றியடைந்திருக்கிறது. இந்தியாவிலிருந்தும் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் ஏறக்குறைய 1000 கண் அறுவைசிகிச்சை நிபுணர்கள் இக்கருத்தரங்கு நிகழ்வில் கலந்து கொண்டிருக்கின்றனர். இந்தியாவில் விழித்திரை நோய்கள் பற்றி மக்கள் மத்தியில் குறைவான விழிப்புணர்வே இருக்கிறது.  விழித்திரை அறுவைசிகிச்சை தளத்தை இது மிகவும் முக்கியமானதாக மாற்றுகிறது. விழித்திரை நோய்கள் தொடர்பாக நிகழ்ந்திருக்கும் அதிவிரைவான மருத்துவ முன்னேற்றங்களினால், அவைகளின் மேலாண்மை மற்றும் சிகிச்சை அதிக பயனளிப்பதாகவும், திறன்மிக்கதாகவும் எளிதில் கிடைக்கக்கூடியதாகவும் மாறியிருக்கிறது.  விழிப்படிக – விழித்திரை அறுவைசிகிச்சையில் சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்புகள் பற்றிய அறிவையும், தகவல்களையும் பகிர்ந்து கொள்வதன் மூலம் சிகிச்சையின் விளைவுகளை மேம்படுத்துவதற்கு விழித்திரை அறுவைசிகிச்சை நிபுணர்களுக்கு உதவுவதே ரெட்டிகான் கருத்தரங்கின் நோக்கமாகும்.”

Press

 
புரொஃபசர் டாக்டர் அமர் அகர்வால் மேலும் பேசுகையில், “விழித்திரை நோய்களே நிகழாமல் முன்தடுக்கக்கூடிய பார்வை திறனிழப்பின் முக்கிய காரணங்களாக இருக்கின்றன. உரிய நேரத்திற்குள் நோயறிதல் செய்யப்படுமானால், விழித்திரை  நோய்களுக்கு திறன்மிக்க சிகிச்சையின் மூலம் குணம் பெற முடியும்.  ஆனால், துரதிருஷ்டவசமாக கண்புரை போன்ற நோய்களுடன் ஒப்பிடுகையில், பார்வை திறனிழப்பு தடுப்பிற்கான செயல்திட்டங்களில் விழித்திரை நோய்களுக்கு குறைவான முன்னுரிமையே கிடைக்கிறது.  பாதிப்பு அறிகுறிகள் பற்றிய விழிப்புணர்வின்மை மற்றும் சிகிச்சையை தேடிப்பெறுவது குறித்து அறிவும், அக்கறையின்மை ஆகியவற்றின் காரணமாக பார்வைத்திறனால் அவதிப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது.  

40 ஆண்டுகள் வயதுக்கு மேற்பட்ட நபர்கள், அவர்களது பார்வைத்திறனை பரிசோதிக்க எளிய பரிசோதனைகளை கண்டிப்பாக செய்துகொள்ள வேண்டும்; ஒரு கண்ணை மூடிக்கொண்டு மற்றொரு கண்ணில் மங்கலான பார்வை இருக்கிறதா என்று பரிசோதிப்பதன் மூலம் இதை செய்யலாம். பாதிக்கப்பட்ட நிற பார்வைத்திறன், குறைந்திருக்கிற எதிரிடை (கான்ட்ராஸ்ட்) அல்லது நிற உணர்திறன் ஆகியவை இருக்கும்போது விழித்திரை சிறப்பு நிபுணரை நோயாளிகள் கலந்தாலோசிக்க வேண்டும். குறிப்பாக, நீரிழிவு (சர்க்கரை நோய்) இருக்கும் அனைத்து நபர்களும் அவர்களது இரத்த சர்க்கரை அளவுகளை கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருப்பது மிகவும் முக்கியம். விழித்திரையில் ஏற்படுகிற ஆரம்ப நிலை மாற்றங்களை கண்டறிவதற்கு ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒருமுறை தவறாமல் விழித்திரை பரிசோதனை செய்துகொள்வது அத்தியாவசியம்,” என்று கூறினார்.