ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வெள்ளி, 11 அக்டோபர் 2024 (13:25 IST)

விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளை பொருட்களை அவரே விலை நிர்ணயம் செய்ய அரசுக்கு கோரிக்கை- தமிழக உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் வேல்முருகன்!

தமிழக உழவர் உழைப்பாளர் கட்சி இணையதள உறுப்பினர் சேர்க்கை  மதுரை  மாட்டுத்தாவனி அருகே  தனியார் அரங்கில் நடைப்பெற்றது.
 
அதில் தமிழக உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் இணையதளத்தில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
 
தமிழக உழவர் உழைப்பாளர் கட்சி மற்றும் தமிழ்நாடு விவசாய சங்க tuuk.in என்ற இணையதளத்தில் உறுப்பினர் சேர்க்கை இன்று முதல் நடைப்பெறும் என அறிவித்தார்.
 
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் வேல்முருகன்......
 
தமிழக உழவர் உழைப்பாளர் கட்சிக்கு
இந்திய தேர்தல் ஆணையம் முறையாக அங்கீகாரம் வழங்கியுள்ளது‌.  மாநில பொதுச் செயலாளர் ரங்கசாமி நாயுடு, மதுரை மாவட்ட தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலையில்   கட்சியின் உறுப்பினர் படிவம் வழங்கப்பட்டது.
 
மதுரை மண்ணில் தான் அனைத்து கட்சியின் அரசியலைத் தொடங்குகிறார்கள். அதனால் நாங்களும் மதுரையில் துவங்கி உள்ளோம்.  இணையதளம் வாயிலாக உறுப்பினர் சேர்க்கை நடைப்பெறும். 
 
மதுரை மாவட்ட தலைவர் முருகன், 
மாநில இளைஞரணி தலைவர் கார்த்திகேயன், மாவட்ட செயலாளர் பாலமுருகன்  ஆகியோர் முன்னிலையில் உறுப்பினர் படிவம் வழங்கியுள்ளோம். 
 
விவசாயிகளின் நலனில் அக்கறை உள்ள அரசு திமுக அரசு. உழவர் உழைப்பாளர் கட்சியின் கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் கூறியப்படி விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், கூட்டுறவு கடனை அடியோடு ரத்து செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்தார்கள். அதன்படியே முதல்வர் பதவி ஏற்ற உடனே அனைத்து விவசாயிகளுக்கு முற்றிலும் இலவச மின்சாரம்,  கடன் ரத்து உள்ளிட்டவைகளை செய்து கொடுத்தார்கள்.  அதற்கு நாங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் 
 
இன்றைய முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கும், உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் எங்கள் கட்சியின் சார்பில்  வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 
விவசாயிகளுக்கு தீங்கு விளைவிக்கும் மோடி அரசு அவர்களை இந்திய நாட்டை விட்டு வெளியேறும் வரை உழவர் உழைப்பாளர் கட்சி போராடும்.
 
மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள்  போராடிய போது  தமிழகம் சார்பாக திமுக கூட்டணி சார்பில் தமிழக உழவர் உழைப்பாளர் கட்சி 100 பேரை திரட்டி கொண்டு அங்கு சென்று போராடினோம் அதில் வெற்றி கண்டோம்.
 
விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் விளை பொருட்களுக்கு விலையை நிர்ணைய செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.
 
தமிழக அரசு நடத்தும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில்  சில தவறுகள் வருகிறது. தமிழக உணவுத்துறை அமைச்சர் மற்றும்  முதல்வரை அவர்களும் தலையிட்டு பிரச்சனையை தீர்த்து அரசு நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் எந்த கோரிக்கை அரசுக்கு வைக்கிறோம். 
 
ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்குவதாக தெரிவித்தனர். அதை எங்கள் கட்சி சார்பில் வரவேற்கிறோம்.
 
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் குழு நியமித்து உறுப்பினர் சேர்க்கை தொடர்ந்து நடைபெற்று ஒரு வலுவான கட்சியாக உருவாகும் என்றார்.