1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: வியாழன், 4 ஜூன் 2015 (16:49 IST)

டாஸ்மாக் கடை நேரம் அதிரடியாக குறைப்பு: தமிழக அரசு அரசு அதிரடி

தமிழகத்தில் உள்ள அரசு மதுபானக் கடைகள் ஜூன் 5ஆம் தேதி மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
 
தமிழகத்தில் 33 மாவட்டங்களில் 6800 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றது. இதன் மூலம் தமிழ அரசுக்கு கடந்த ஆண்டு சுமார் 25,000 கோடி ரூபாய் வருமானம் கிடைத்து வருகின்றது.
 
ஆனால், தமிழகத்தில் குற்ற செயல்கள் அதிக அளவில் நடைபெற மதுவும் ஒரு காரணம் என எதிர்க் கட்சிகளும், சமுக ஆர்வலர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
 
மேலும், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை மாற்றக் கோரி பல பகுதிகளில் பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் மதுவிலக்கை அமுல்படுத்த கோரி தொடர் போராட்டங்களும் நடைபெற்றது.
 
இந்நிலையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாராமரிக்கும் வகையில், நாளை முதல் அனைத்து மதுபான கடைகளும் மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே இயங்கும் என தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு முன்பு வரை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை டாஸ்மாக் கடைகள் இயங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்ற உடனே டாஸ்மாக் கடை நேரத்தை குறைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதை இப்போதுதான் ஜெயலலிதா செய்துள்ளார்.
 
ஆர்.கே.நகர் தொகுதியில் முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் வேட்பு மனு தாக்கல் செய்யும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் ஜெயலலிதாவுக்கு தமிழகம் முழுக்க பெண்கள் மத்தியில் ஆதரவு பெருகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.