வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து: மேல்முறையீடு செய்ய அரசுக்கு பரிந்துரை
வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து: மேல்முறையீடு செய்ய அரசுக்கு பரிந்துரை
வன்னியர்களுக்கு வழங்கப்பட்டிருந்த 10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை அடுத்து இந்த வழக்கை மேல்முறையீடு செய்யலாம் என அரசு வழக்கறிஞர் அரசுக்கு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இன்று மதுரை ஐகோர்ட்டில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழக்கு தொடர்பான தீர்ப்பு வெளியானது. இந்த தீர்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது செல்லாது என தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த நிலையில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இன்னும் ஒரு சில நாட்களில் இந்த வழக்கு மேல்முறையீடு செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது