1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 22 ஜூலை 2016 (11:20 IST)

ஸ்மார்ட் ரேசன் கார்டு: தமிழக பட்ஜெட்டில் அறிமுகம்

2016ஆம் ஆண்டி இறுதிக்குள் அனைத்து ரேசன் கார்டுகளையும் ஸ்மார்ட் கார்டாக மாற்றப்படும் என்று தமிழக பட்ஜெட் தாக்கலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

 
மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பொது விநியோகத்திட்டத்தில் 34,686 நியாயவிலைக்கடைகள் மூலம், 1.91 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கும் விலையில்லா அரிசி வழங்கப்பட்டு வருகிறது. பொது விநியோகத் திட்டத்தின் செயல்பாடுகளை கணினிமயமாக்குவதற்காகவும், ரேசன்கார்டு தகவல் தொகுப்பினை ஆதார் எண்ணுடன் ஒருங்கிணைப்பதற்காகவும், 318.40 கோடி ரூபாய் செலவில் கணினி மயமாக்கும் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில் 2016-ம் ஆண்டின் இறுதிக்குள் ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்படும் என்றும், இத்திட்டச் செயலாக்கத்தில் உள்ள குறைகளைச் சீர்செய்து செம்மைப்படுத்தவும் வழி ஏற்படும். 
 
மேலும், புதிய ரேசன்கார்டுகள் வழங்குதல், இடம் பெயர்தல் போன்ற மாறுதல்களை இணைய வழியாக மேற்கொள்வதுடன், மக்களுக்கு எளிதில் பயனளிக்கும் வகையில் செயல்பாடுகள் துரிதமாகவும் எளிதாகவும் இருக்க வழிவகை ஏற்படும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.