1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : சனி, 26 செப்டம்பர் 2015 (16:08 IST)

3 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தேன்: குற்றவாளி பரபரப்பு வாக்கு மூலம்

தனியார் பள்ளியில் சமையல் வேலை செய்து வந்த கலா கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான குற்றவாளி, குடிபோதையில் 3 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தேன் என்று பரபரப்பு வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.
 
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள மேட்டுக்குப்பத்தை சேர்ந்தவர் ராமானுஜம். இவரது மனைவி கலா. 40 வயதுடைய கலா அப்பகுதியிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் சமையல் வேலை செய்து வந்தார். 
 
இவர் கடந்த ஆகஸ்டு மாதம் 13 ஆம் தேதி இரவு காணாமல் போனார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை பல இங்களில் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
 
இந்நிலையில், மேட்டுக்குப்பத்திலுள்ள தனியார் பள்ளியில் இருந்து சுமார் 50 மீட்டர் தூரத்திலுள்ள வயல்வெளியில் கலா பிணமாக கிடந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். அவரது ஆடைகள் அலங்கோலமாக கிடந்தன.
 
இது குறித்து திருவெண்ணைநல்லூர் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அங்கு வந்த காவல்துறையினர், கலாவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். கலாவின் உடலை சோதனை செய்தபோது, அவரது கழுத்து நெரிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
 
இதனால் கலா,  பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்திருக்கக் கூடும் என்ற சந்தேகம் காரணமாக, மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்களும் அங்கு வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி, கொலையாளிகளைத் தேடிவந்தனர்.
 
இந்நிலையில், திருவெண்ணைநல்லூர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கலாவின் செல்போன் மூலம் துப்பு துலங்கியது. அதன் பேரில் மேட்டுக்குப்பத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார்.
 
அந்த வாக்குமூலத்தில் மணிகண்டன் கூறியிருப்பதாவது:–
 
கடந்த மாதம் 13 ஆம் தேதி இரவு நான் சில நண்பர்களுடன் சேர்ந்து மேட்டுக்குப்பம் ஏரிக்கரையில் உள்ள கோவில் அருகே மது குடித்து கொண்டிருந்தேன். அந்த வழியாக கலா நடந்து வந்தார். எங்களை கண்டவுடன், "ஏன் மது குடித்து கெட்டுப் போகிறீர்கள்?" என்று கண்டித்து விட்டு சென்றார். குடிபோதையில் இருந்த எனக்கு கலாவை அனுபவிக்க வேண்டும் என்ற வெறி ஏற்பட்டது.
 
உடனே எனது நண்பர்களை விட்டு பிரிந்து வீட்டுக்கு செல்வது போல் அந்த இடத்தில் இருந்து கிளம்பினேன். கலா சென்ற பள்ளிக்கூட பகுதிக்கு குறுக்கு வழியில் வேகமாக சென்றேன். அந்த வழியாக வந்த கலாவை..
மேலும் அடுத்தப் பக்கம் பார்க்க..
வழிமறித்தேன். அதனை கண்டு திடுக்கிட்ட அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக அருகே உள்ள புதர் பகுதிக்கு இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தேன்.
 
பிறகு அவர் இதை யாரிடமும் கூறி விடக்கூடாது என்ற பயத்தில் கழுத்தை நெரித்தும், நெஞ்சில் மிதித்தும் கொலை செய்தேன். பின்னர் கலா வைத்திருந்த செல்போனை எடுத்து கொண்டு, அவரது உடலை சிறிது தூரம் இழுத்து சென்று போட்டு விட்டு வீட்டுக்கு வந்து விட்டேன்.
 
மறுநாள் காலையில் கலா கொலை செய்யப்பட்டு கிடப்பதாக தகவல் அறிந்து அப்பகுதியினர் சென்று பார்த்தனர். நானும் அப்பாவி போல் அந்த கூட்டத்தில் நின்று கலாவின் உடலை பார்த்தேன். சிறிது நாள் கழித்து நான் கூலி வேலைக்காக சென்னைக்கு சென்றுவிட்டேன்.
 
கடந்த 2 நாட்களுக்கு முன்பு கலாவின் செல்போனில் எனது சிம்கார்டை போட்டு பேசினேன். செல்போன் டவர் சிக்னல் மூலம் அதனை காவல்துறையினர் கண்காணித்து என்னை பிடித்தனர். விசாரணையில் நான் கலாவை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டேன். எனவே, என்னை காவல்துறறையினர் கைது செய்தனர்.
 
எனக்கு மது குடித்து போதை தலைக்கேறியவுடன் பெண்ணைக் கண்டால் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுவிடும். எனவே கலாவை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது போல், கடந்த ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி இரவு மேட்டுக்குப்பத்தைச் சேர்ந்த ஞானாம்பாள் என்பவர் வீட்டுக்குள் புகுந்து தனியாக படுத்திருந்த அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்தேன்.
 
அதே போல் கடந்த ஜூலை மாதம் மேட்டுக்குப்பம் ஏரிக்கரை பகுதியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த சாந்தா என்ற பெண்ணையும்  பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தேன். உயிரோடு விட்டு விட்டால் என்னை காட்டிக் கொடுத்து விடுவார்கள் என்று பயந்து கலா உள்பட 3 பெண்களையும் தீர்த்துக் கட்டினேன். எனினும் இறுதியில் காவல்துறையினரிடம் சிக்கிக் கொண்டேன். இவ்வாறு அந்த வாக்குமூலத்தில் கூறியிருந்தார்.
 
இதைத் தொடர்ந்து, கைதான மணிகண்டனை உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர் அவரை கடலூர் சிறையில் அடைத்தனர்.