1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 18 செப்டம்பர் 2016 (19:30 IST)

”ராம்குமார் தற்கொலையில் ஈடுபட வாய்ப்பே இல்லை” - வழக்கறிஞர் உறுதி

ராம்குமார் தற்கொலை முயற்சியில் ஈடுபட வாய்ப்பே இல்லை என அவரது வழக்கறிஞர் ராமராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.
 
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த ஜூன் 24ஆம் தேதி அதிகாலை மென்பொறியாளர் சுவாதி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் சென்னை மற்றும் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
 
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்திய இந்த வழக்குத் தொடர்பாக நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த இளைஞர் ராம்குமார் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
 
இந்நிலையில், ராம்குமார் சமையல் அறைக்கு செல்லும் மின்சார கம்பியை கடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த ராம்குமார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
ஆனால், ராம்குமார் தற்கொலை முயற்சியில் ஈடுபட வாய்ப்பே இல்லை என அவரது வழக்கறிஞர் ராமராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பதிலளித்துள்ள ராமராஜ், “'நேற்று தான் ராம்குமாரை சிறையில் சந்தித்தேன். அப்போது அவர் நல்ல மனநிலையில் இருந்தார். விரைவில் தன்னை பெயிலில் எடுக்கும்படி கேட்டுக் கொண்டார்.
 
நேற்று சிறைத்துறை அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.