1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 18 செப்டம்பர் 2016 (21:11 IST)

விடுதலையாகி வருவான் என்று நம்பி இருந்தோம்: பதறும் ராம்குமார் தந்தை

ராம்குமார் விடுதலையாகி வருவான் என்று நம்பி இருந்தோம். அதற்குள் இப்படி ஒரு தகவலை காவல் துறையினர் தெரிவித்து இருக்கிறார்கள் என்று ராம்குமாரின் தந்தை பரமசிவம் வேதனை தெரிவித்துள்ளார்.
 

 
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த ஜூன் 24ஆம் தேதி அதிகாலை மென்பொறியாளர் சுவாதி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த இளைஞர் ராம்குமார் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
 
இந்நிலையில், ராம்குமார் சமையல் அறைக்கு செல்லும் மின்சார கம்பியை கடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த ராம்குமார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
இந்நிலையில், பிரபல பத்திரிக்கை ஒன்றிடம் பேசியுள்ள ராம்குமாரின் தந்தை பரமசிவம், ‘‘என் மகனுக்கும் இந்த கொலைக்கு எந்த தொடர்பும் இல்லை. சிறையில் சந்தித்தபோது நான் இந்த கொலையை செய்யவில்லை. ஏதோ சதியால் என்னை சிக்க வைத்துள்ளார்கள்.
 
உண்மை சீக்கிரம் வெளியே தெரியவரும் என்று சொல்லிக்கொண்டு இருந்தான். நானும் அவன் சொன்னதை நம்பியே இருந்தேன். அவன் விடுதலையாகி வருவான்னு நம்பி இருந்தோம். ஆனால், இப்போது என் மகனை அரசும், காவல்துறையும் சேர்ந்து கொலை செய்து இருக்கிறார்கள்.
 
இதில் சதி இருக்கிறது. இதை கண்டுபிடிக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால், அரசே இப்படி ஒரு செயலை செஞ்சிருக்குமோன்னு சந்தேகமாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.