1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Modified: ஞாயிறு, 18 செப்டம்பர் 2016 (19:05 IST)

ராம்குமார் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா?

ராம்குமாரின் இறப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் அவர் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்பது குறித்தும் தெரியவில்லை என்று ராம்குமாரின் உறவினர் தெரிவித்துள்ளார்.


 

 
ராம்குமார் தற்கொலை முயற்சியில் இறந்துவிடார் என்று இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் அவர் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்பது குறித்து தெரியவில்லை என்று ராம்குமாரின் உறவினர் தெரிவித்துள்ளார்.
 
மேலும் ராம்குமாரின் தற்கொலை முயற்சி மற்றும் உயிரிழப்பு குறித்து சிறைத்துறையினர் கூறியதாவது:-
 
புழல் சிறையில் மாலை 4.45 மணிக்கு ராம்குமாரின் சிறையின் அருகில் சமையில் அறைக்கு செல்லும் மின்சார கம்பியை கடித்து தனது உடம்பிலும் செலுத்திக்கொண்டார். இதனால் ஆபத்தான நிலையில் இருந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே உயிரிழந்தார், என்று தெரிவித்துள்ளனர்.
 
மேலும் ராம்குமார் மரணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.