கமல் போய் பேசிட்டாரு நாளைக்கு காவேரி தண்ணி வந்துரும்: ராமதாஸ் கிண்டல்!
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கர்நாடக முதல்வர் குமாராமியை அவரது அலுவலகத்தில் இன்று சந்தித்தார். அதன் பின்னர் இருவரும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
அப்போது கமல், இந்த நேரத்தில் திரைப்படங்களை விட காவிரி நீர் பிரச்சனை மிக முக்கியமானது. எனவே காவிரி விவகாரம் மட்டுமே எங்களின் பேச்சுவார்த்தையில் இடம்பெற்றது என தெரிவித்தார்.
இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் பின்வருமாறு டிவிட்டரில் பதிவிட்டுள்ளார், காவிரி சிக்கல் குறித்து கர்நாடக முதலமைச்சருடன் கமல்ஹாசன் இன்று பேச்சு நடத்தினாராம். அநேகமாக நாளை அல்லது அதற்கு மறுநாள் காவிரியில் தண்ணீர் வந்து விடும் என்பதால் குறுவைப் பாசனத்திற்கு தயாராக இருக்கவும் என்று கிண்டலடித்துள்ளார்.