திங்கள், 8 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth K
Last Modified: வெள்ளி, 8 ஆகஸ்ட் 2025 (14:08 IST)

வலுக்கும் ராமதாஸ் - அன்புமணி மோதல்! பேச்சுவார்த்தை நடத்த உடனே வர சொன்ன நீதிபதி!

Ramadoss Anbumani Clash

பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸ் - செயல் தலைவர் அன்புமணி இடையே மோதல் வலுத்து வரும் நிலையில் அவர்களை பேச்சுவார்த்தைக்காக அழைத்துள்ளார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி.

 

பாமகவில் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் மோதல் வலுத்துள்ளது. தினம் தினம் அன்புமணியை பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகளை ராமதாஸ் முன்வைக்கிறார். அதேசமயம் அன்புமணி கட்சி சார்பில் பயணம், கூட்டங்கள் மேற்கொண்டால் அதற்கும் ராமதாஸ் தடை விதிக்கிறார். 

 

இந்நிலையில் பாமக பொதுக்குழு கூட்டத்தை அன்புமணி தலைமையில் கூட்டுவதாக அழைப்பு வெளியான நிலையில், அதற்கு எதிராக ராமதாஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

 

தொடர்ந்து இருவருக்கும் இடையே நடந்து வரும் மோதலை தொடர்ந்து அவர்கள் இருவரையும் தனியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முடிவு செய்துள்ளார்.

 

இதுகுறித்து பேசிய அவர், அன்புமணி மற்றும் ராமதாஸ் இருவரும் பேச்சுவார்த்தைக்கு வரும்போது, கட்சியினர், வழக்கறிஞர்கள் யாரும் உடன் வரக்கூடாது என்றும், உடனடியாக ராமதாஸை சென்னைக்கு கிளம்ப சொல்லுங்கள் என்றும் வேண்டுகோளாக தெரிவித்துள்ளார். இதனால் இன்றே இந்த சமரச பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K