வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (12:01 IST)

கல்லூரிகள், தொழில் நிறுவனங்களை கொரோனா வார்டாக மாற்றுங்கள்! – ராஜீவ் ரஞ்சன்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் கொரோனா சிகிச்சை மையங்களை அதிகப்படுத்த தலைமை செயலாளர் ராஜீன் ரஞ்சன் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனா சிகிச்சை மையங்களை அதிகப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தலைமை செயலாளர் ராஜீன் ரஞ்சன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கொரோனா கண்காணிப்பு மையங்களின் எண்ணிக்கையை கடந்த ஆண்டை விட அதிகமாக்க வேண்டும் என கூறியுள்ள அவர், இதற்காக பயன்படுத்தப்பட்ட கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள், பள்ளிகள் போன்றவற்றை மாவட்ட ஆட்சியர்கள் உரிய முறையில் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.