1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 10 அக்டோபர் 2024 (17:33 IST)

ரத்தன் டாடா, முரசொலி செல்வம் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்..!

ரத்தன் டாடா மற்றும் முரசொலி செல்வம் மறைவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மருமகன் முரசொலி செல்வம் இன்று உயிரிழந்த நிலையில், அவரது மறைவுக்கு ரஜினிகாந்த் சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது, “முரசொலி செல்வம் என்னுடைய நீண்ட கால நண்பர் மற்றும் அருமையான நண்பர். அவருடைய மறைவு எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது. அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும், அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள்.”

அதேபோல், ரத்தன் டாடா மறைவுக்கு ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:

“உலக வரைபடத்தில் இந்தியாவை தனது தொலை நோக்குப் பார்வையாலும், ஆர்வத்தாலும் இடம்பிடிக்க வைத்தவர். ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை ஊக்கப்படுத்தியவர், லட்சக்கணக்கான தலைமுறைகளுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்தவர். அனைவராலும் நேசிக்கப்பட்டு, மதிக்கப்பட்ட மனிதர். அந்த சிறந்த மனிதருடன் நான் செலவழித்த ஒவ்வொரு நொடிகளும் போற்றுதலுக்குரியவை. அவருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள். இந்தியாவின் உண்மையான மகன் இன்று இல்லை.”

Edited by Mahendran